குறள் 1251

நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு

kaamak kanichi utaikkum niraiyaennum
naanuththaal veelththa kathavu


Shuddhananda Bharati

Reserve lost

Passion's axe shall break the door
Of reserve bolted with my honour.


GU Pope

Reserve Overcome

Of womanly reserve love's axe breaks through the door,
Barred by the bolt of shame before.

The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.


Mu. Varadarajan

நாணம்‌ என்னும்‌ தாழ்ப்பாள்‌ பொருந்திய நிறை என்று சொல்லப்படும்‌ கதவைக்‌ காமம்‌ ஆகிய கோடரி உடைத்து விடுகின்றது,


Parimelalagar

நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது; இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை.
விளக்கம்:
(கணிச்சி - குந்தாலி. நானுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.)


Manakkudavar

நிறையழிதலாவது வேட்கை மிகுதியால் தன் நிலையழிந்து தலைமகள் கூறுதல். நெஞ்சின் மிக்கது புலப்படுமாதலான், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) காமமாகியமழு உடையாநின்றது; நாணமாகிய தாழில் அடைக் கப்பட்ட அறிவாகிய கதவினை,
(என்றவாறு). இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக் குத் தலைமகள் கூறியது.