Kural 1250
குறள் 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்
thunnaath thurandhthaarai naenjchaththu utaiyaemaa
innum ilaththum kavin
Shuddhananda Bharati
Without a thought he deserted us
To think of him will make us worse.
GU Pope
O If I should keep in mind the man who utterly renounces me,
My soul must suffer further loss of dignity.
If Iretain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward)beauty that remains.
Mu. Varadarajan
நம்மோடு பொருந்தியிருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது, இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.
Parimelalagar
'அவரை மறந்து ஆற்றல் வேண்டும்' என்பதுபடச் சொல்லியது. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்போம்.
விளக்கம்:
("குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்" (குறுந். கடவுள் வாழ்த்து) என்புழிப்போல 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும், நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி 'நிறன் நிறையும் இழப்போம்,' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ் சகத்தே யுடையோமாயின், முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம் ; ஆதலான் மறத்தலே கருமம்,
(என்றவாறு). ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை . இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.