குறள் 1249

நெஞ்சொடுகிளத்தல்

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

ullaththaar kaatha lavaraal ullinee
yaarulaich saeriyaen naenjsu


Shuddhananda Bharati

Soliloquy

The lover lives in Self you know;
Whom you think, mind to whom you go?


GU Pope

Soliloquy

My heart! my lover lives within my mind;
Roaming, whom dost thou think to find?

O my soul! to whom would you repair, while the dear one is within yourself?


Mu. Varadarajan

என்‌ நெஞ்சே! காதலர்‌ உன்‌ உள்ளததில்‌ உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம்‌ தேடிச்‌ செல்கின்றாய்‌?


Parimelalagar

இதுவும் அது. என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து?
விளக்கம்:
('உள்ளம்' என் புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்ற வரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை உடைத்து அதனை ஒழி,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) என்னெஞ்சே! நன்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்தி லே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய்,
(என்றவாறு). இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.