Kural 1247
குறள் 1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு
kaamam viduonno naanvidu nannaenjsae
yaano poraeniv virandu
Shuddhananda Bharati
Off with love O mind, or shame
I cannot endure both of them.
GU Pope
Or bid thy love, or bid thy shame depart;
For me, I cannot bear them both, my worthy heart!
O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.
Mu. Varadarajan
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது
Parimelalagar
நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது. நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காமவேட்கையை விடு; ஒன்று நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன்.
விளக்கம்:
('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது 'நல்நெஞ்சே' என்றது, 'இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிறுண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன்,' என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.)
Manakkudavar
(இதன் பொருள்) எனக்கு நல்ல நெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும் ; ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்; யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறு த்தலரிது.
(என்றவாறு). இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக்கருதிய தலை மகள் நாணந்தடுத்தமைகண்டு கூறியது.