குறள் 1246

நெஞ்சொடுகிளத்தல்

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு

kalandhthunarththum kaathalark kantaatr pulandhthunaraai
poikkaaivu kaaithiyen naenjsu


Shuddhananda Bharati

Soliloquy

Wrath is false, O heart, face-to face.
Sans huff, you rush to his sweet embrace.


GU Pope

Soliloquy

My heart, false is the fire that burns; thou canst not wrath maintain,
If thou thy love behold, embracing, soothing all thy pain.

O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased andcontinue to be so. Nay, your displeasure is (simply) false.


Mu. Varadarajan

என்‌ நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல்‌ உணர்த்த வல்ல காதலரைக்‌ கண்டபோது நீ பிணங்கி உணரமாட்டாய்‌! பொய்யான சினங்கொண்டு காய்கின்றாய்‌.


Parimelalagar

தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது. என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கண்டால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டா நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயா நின்றாய்; இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக.
விளக்கம்:
('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி, அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) என்னெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறி ந்து வைத்தும், அவரைக் கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை ; இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்,
(என்றவாறு).