Kural 1245
குறள் 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
setrraar yenakkai vidaluntoh naenjsaeyaam
utrraal uraaa thavar
Shuddhananda Bharati
He spurns our love and yet, O mind,
Can we desert him as unkind?
GU Pope
O heart, as a foe, can I abandon utterly
Him who, though I long for him, longs not for me?
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?
Mu. Varadarajan
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்துவிட்டார் என்று எண்ணிக் கை விட முடியுமோ?
Parimelalagar
இதுவும் அது. நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர்யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.
விளக்கம்:
(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தருவது' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ ?
(என்றவாறு). உறுதல் - விரைந்துறு தல், தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.