குறள் 1244

நெஞ்சொடுகிளத்தல்

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று

kannum kolachsaeri naenjsae ivaiyaennaith
thinnum avarkkaanal utrru


Shuddhananda Bharati

Soliloquy

Take these eyes and meet him, O heart
Or their hunger will eat me out.


GU Pope

Soliloquy

O rid me of these eyes, my heart; for they,
Longing to see him, wear my life away.

O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.


Mu. Varadarajan

நெஞ்சே! நீ அவரிடம்‌ செல்லும்‌ போது என்‌ கண்களையும்‌ உடன்‌ கொண்டு செல்வாயாக; அவரைக்‌ காண வேண்டும்‌ என்று இவை என்னைப்‌ பிடுங்கித்‌ தின்கின்றன.


Parimelalagar

இதுவும் அது. நெஞ்சே, கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே நீஅவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும்.
விளக்கம்:
('கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது. தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம்: என்றது, தான் சேறல் குறித்து.)


Manakkudavar

(இதன் பொருள்) நெஞ்சே! நீ அவர் மாட்டுச் செல்லுவையாயின், இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக; அவரைக்காணலுற்று இவை என் னைத் தின்பனபோல் நலியா நின்றன,
(என்றவாறு). கொள் - பார்க்க.