குறள் 1243

நெஞ்சொடுகிளத்தல்

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்

irundhthulli yenparithal naenjsae parindhthullal
paithalnoi seithaarkan il


Shuddhananda Bharati

Soliloquy

O mind, why pine and sit moody?
Who made you so pale lacks pity.


GU Pope

Soliloquy

What comes of sitting here in pining thought, O heart? He knows
No pitying thought, the cause of all these wasting woes.

O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.


Mu. Varadarajan

நெஞ்சே(என்னுடன்‌)இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்‌? இந்தத்‌ துன்பநோயை உண்டாக்கியவரிடம்‌ இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும்‌ தன்மை இல்லையே!


Parimelalagar

இதுவும் அது. நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே, அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்துபடுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பயுள் நோய் செய்தார்மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது.
விளக்கம்:
('நம்மாட்டு அருளுடையர், அன்மையின், தாமாக வாரார்; நாம் சேறலே இனித் தகுவது' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து, அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு ? வருத்தமுற்று நினைத்தால் நமக்குச் சிறுமை செய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின்,
(என்றவாறு). இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.