குறள் 1240

உறுப்புநலனழிதல்

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு

kannin pachappo paruvaral yeithinrae
onnuthal seithathu kandu


Shuddhananda Bharati

Limbs languish

Pale eyes pained seeing the pallor
Of the bright forehead of this fair.


GU Pope

Wasting Away

The dimness of her eye felt sorrow now,
Beholding what was done by that bright brow.

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?


Mu. Varadarajan

காதலியின்‌ ஒளிபொருந்திய நெற்றி, பசலை நிறம்‌ உற்றதைக்‌ கண்டு, அவளுடைய கண்களின்‌ பசலையும்‌ துன்பம்‌ அடைந்துவிட்டது,


Parimelalagar

இதுவும் அது. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாக ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு.
விளக்கம்:
('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது; யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்,' எனத், தன் வன்மையும் தன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம். ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும்; யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒள்ளியநுதல் பசந்தது கண்டு, கண்ணிலுண்டான பசலை கலங் கற்று ,
(என்றவாறு)