குறள் 1241

நெஞ்சொடுகிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து

ninaiththonru sollaayo naenjsae yenaiththonrum
yevvanoi theerkkum marundhthu


Shuddhananda Bharati

Soliloquy

Think of, O heart, some remedy
To cure this chronic malady.


GU Pope

Soliloquy

My heart, canst thou not thinking of some med'cine tell,
Not any one, to drive away this grief incurable?

O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?


Mu. Varadarajan

நெஞ்சே! (காதலால்‌ வளர்ந்த) இத்‌ துன்பநோயைத்‌ தீர்க்கும்‌ மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப்‌ பார்த்து எனக்குச்‌ சொல்லமாட்டாயோ?


Parimelalagar

தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது. நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன்; எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல்.
விளக்கம்:
(எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்,' என்றாள்.)


Manakkudavar

நெஞ்சொடுகிளத்தலாவது நெஞ்சு முன்னிலையாகத் தலைமகள் சொல்லு தல். காதலடக்க லாற்றாதார் பிறர்க்குச் சொல்லுதற்குநாணித் தன்னெஞ்சிற்குச் சொல்லி யாற்று தலான், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) நெஞ்சே! நீ எனக்கு உற்ற எவ்வநோயைத் தீர்க்கும் மருந்தா வது யாதொன்றாயினும் ஒன்றை விசாரித்துச் சொல்லாய்,
(என்றவாறு). இஃது ஆற்றுதலரிதென்று கூறியது. இவையெல்லாம் தனித்தனி சில்கூற் றென்று கொள்ளப்படும்.