Kural 1237
குறள் 1237
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து
paadu paeruthiyo naenjsae kotiyaarkken
vaaduthot poochal uraiththu
Shuddhananda Bharati
Go and tell the cruel, O mind
Bruit ov'r my arms and glory find.
GU Pope
My heart! say ought of glory wilt thou gain,
If to that cruel one thou of thy wasted arms complain?
Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?
Mu. Varadarajan
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
Parimelalagar
அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது. நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவர் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினாள் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி: பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின அதனை ஒப்பதில்லை.
விளக்கம்:
('கொடியார்க்கு' என்பதும் கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச் சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடா நின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்; ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; வந்தால், இவையெல்லாம் நீங்கும்; நீங்க, அஃது எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால், 'பாடு பெறுதியோ?' என்றாள்.)
Manakkudavar
(இதன் பொருள்) நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனது தோள் வாடுத லானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி, நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?
(என்றவாறு) இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.