குறள் 1236

உறுப்புநலனழிதல்

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து

thotiyodu tholnaekila noval avaraik
kotiyar yenakkooral nondhthu


Shuddhananda Bharati

Limbs languish

Arms thin, armlets loose make you call
My sire cruel; that pains my soul.


GU Pope

Wasting Away

I grieve, 'tis pain to me to hear him cruel chid,
Because the armlet from my wasted arm has slid.

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.


Mu. Varadarajan

வளையல்கள்‌ கழன்று தோள்களும்‌ மெலிவடைவதால்‌ (அவற்றை காண்போர்‌) காதலரைக்‌ கொடியவர்‌ என்று கூறுவதைக்‌ கேட்டு வருந்துகின்றேன்‌.


Parimelalagar

தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தொடியொடு தோற்நெகிழ-யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய, அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன்.
விளக்கம்:
(ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) வளையோடே தோள்கள் பண்டு போல் இருக்காது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்; நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து, (எ - று.) இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலென்பது படத் தலை மகள் சொல்லியது.