குறள் 1233

உறுப்புநலனழிதல்

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்

thanandhthamai saala arivippa polum
manandhthanaal veengkiya thol


Shuddhananda Bharati

Limbs languish

These arms that swelled on nuptial day
Now shrunk proclaim "He is away".


GU Pope

Wasting Away

These withered arms, desertion's pangs abundantly display,
That swelled with joy on that glad nuptial day.

The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly(to the public).


Mu. Varadarajan

கூடியிருந்த காலத்தில்‌ மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள்‌, (இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவைபோல்‌ உள்ளன.


Parimelalagar

இதுவும் அது. மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று; இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்தவதுபோல மெலியா நின்றன; இது தகாது.
விளக்கம்:
('அன்றும் அவ்வாறு பூரித்து, இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.) _


Manakkudavar

(இதன் பொருள்) காதலர் கூடின் நாட்களிற் பூரித்ததோள்கள், அவர் நீங்கின மையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பனபோ லாகாநின்றன,
(என்றவாறு). கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனது தோள் வாட்ட முற்றது கண்ட தோழிக்குச் சொல்லியது.