குறள் 1231

உறுப்புநலனழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்

sirumai namakkoliyach saetsenraar ulli
narumalar naanina kan


Shuddhananda Bharati

Limbs languish

To lift from want he left me afar
His thought makes my eyes blush the flower.


GU Pope

Wasting Away

Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see,
Thinking on him, who wand ring far, leaves us in misery.

While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (thesight of) fragrant flowers.


Mu. Varadarajan

இத்துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத்‌ தொலைவில்‌ உள்ள நாட்டுக்குச்‌ சென்ற காதலரை நினைந்து அழுதமையால்‌ கண்கள்‌ அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணிவிட்டன.


Parimelalagar

ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.
விளக்கம்:
(நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்,' என்பது கருத்து.)


Manakkudavar

உறுப்புநலனழிதலாவது தலைமகளது உறுப்புக்கள் நலனழிந்தமை கூறுதல். காதமிக்கு இரங்குவார் அக்காதலை அயலாரறியாமல் அடக்கின காலத்து வெம்மை யுற்ற கொடிபோல், அனைத்துறுப்பும் வாடுதலான், இது பொழுதுகண்டிரங்கலின் பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி, நெடு நெறிக்கண் சென்றாரை நினைத்து, கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணாநின்றன,
(என்றவாறு). பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றவா றாயிற்று.