குறள் 1229

பொழுதுகண்டிரங்கல்

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து

pathimarundu paithal ulakkum mathimarundu
maalai padartharum polthu


Shuddhananda Bharati

Eventide sigh

Deluding eve if it prolongs
The whole town will suffer love-pangs.


GU Pope

Lamentations at Eventide

If evening's shades, that darken all my soul, extend;
From this afflicted town will would of grief ascend.

When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.


Mu. Varadarajan

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும்‌ மயங்கி என்னப்போல்‌ துன்பத்தால்‌ வருந்தும்‌.


Parimelalagar


விளக்கம்:
('மதி மருள' என்பது, 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலைகலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) என்மதி நிலைகலங்க , மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும் பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும்,
(என்றவாறு). மதி - மானம்.