Kural 1227
குறள் 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்
kaalai arumpip pakalaellaam pothaaki
maalai malarumindh noi
Shuddhananda Bharati
Budding at dawn burgeoning all day
This disease blooms in evening gay.
GU Pope
My grief at morn a bud, all day an opening flower,
Full-blown expands in evening hour.
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.
Mu. Varadarajan
இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது
Parimelalagar
மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை?' என்றாட்குச் சொல்லியது. இந்நோய் - இக்காம நோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து, மாலை மலரும் - மாலைப் பொழுதின் கண் மலராநிற்கும்.
விளக்கம்:
(துயிலெழுந்த பொழுதாகலின் கனவின் கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும், தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகா நின்றது,' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.)
Manakkudavar
(இதன் பொருள்) இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பி, பகற்பொழு தெல்லாம் முகிழ்முகிழ்த்து, மாலைக்காலத்தே மலராநின்றது,
(என்றவாறு).