குறள் 1226

பொழுதுகண்டிரங்கல்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்

maalainoi seithal manandhthaar akalaatha
kaalai arindhtha thilaen


Shuddhananda Bharati

Eventide sigh

Evening pangs I have not known
When my lord nev'r left me alone.


GU Pope

Lamentations at Eventide

The pangs that evening brings I never knew,
Till he, my wedded spouse, from me withdrew.

Previous to my husband's departure, I know not the painful nature of evening.


Mu. Varadarajan

மாலைப்பொழுது இவ்வாறு துன்பம்‌ செய்யவல்லது என்பதைக்‌ காதலர்‌ என்னைவிட்டு அகலாமல்‌ உடனிருந்த காலத்தில்‌ யான்‌ அறியவில்லை.


Parimelalagar

இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை?' என்றாட்குச் சொல்லியது. மாலை நோய் செய்தல் - முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ் செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ் செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் - காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். 'இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்; அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்;' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) மாலைப்பொழுது நோய் செய்தலை , என்னோடு கூடினவர் பிரி யாத காலத்தே அறியப் பெற்றிலேன்; அறிந்தேனாயின், இது நோய் செய்யும் மென்று கூறியிருப்பேன்,
(என்றவாறு). இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.