குறள் 1223

பொழுதுகண்டிரங்கல்

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்

paniarumpip paithalkol maalai thuniarumpith
thunpam valara varum


Shuddhananda Bharati

Eventide sigh

Wet eve came pale and trembling then
Now it makes bold with growing pain.


GU Pope

Lamentations at Eventide

With buds of chilly dew wan evening's shade enclose;
My anguish buds space and all my sorrow grows.

The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.


Mu. Varadarajan

பனி தோன்றிய பசந்த நிறம்கொண்ட மாலைப்பொழுது எனக்கு வருத்தம்‌ ஏற்பட்டுத்‌ துன்பம்‌ மேன்மேலும்‌ வளரும்படியாக வருகின்றது.


Parimelalagar

ஆற்றல்வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்துவந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்து பாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒருகாலைக்கு ஒரு கால் மிக வாரா நின்றது.
விளக்கம்:
(குளிர்ச்சி தோன்ற மயங்கிவரு மாலை என்னுஞ் செம்பொருள் இக் குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை?' என்பது குறிப்பெச்சம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நெருகல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது, இன்றும் எனக்கு வெறுப்புத் தோன்றி வருத்தம் மிகும்படியாக வாராநின்றது,
(என்றவாறு). இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.