Kural 1222
குறள் 1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை
punkannai vaali marulmaalai yemkaelpol
vankanna thonin thunai
Shuddhananda Bharati
Hail sad eventide dim and grim
Has your mate like mine, cruel whim!
GU Pope
Thine eye is sad; Hail, doubtful hour of eventide!
Of cruel eye, as is my spouse, is too thy bride?
A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.
Mu. Varadarajan
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
Parimelalagar
தன்னுட்கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது. மருள் வாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை - நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம் கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணைபோல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக.
விளக்கம்:
(மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை,' என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.)
Manakkudavar
(இதன் பொருள்) மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப்போல் வன்கண்மையை யுடைத்தோ நின் துணையும்,
(என்றவாறு). இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.