குறள் 1221

பொழுதுகண்டிரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது

maalaiyo allai manandhthaar uyirunnum
vaelainee vaali poluthu


Shuddhananda Bharati

Eventide sigh

Bless you! you are not eventide
But killing dart to wedded bride!


GU Pope

Lamentations at Eventide

Thou art not evening, but a spear that doth devour
The souls of brides; farewell, thou evening hour!

Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married)women.


Mu. Varadarajan

பொழுதே! நீ மாலைக்காலம்‌ அல்லை: (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்‌) மகளிரின்‌ உயிரை உண்ணும்‌ முடிவுக்‌ காலமாக இருக்கின்றாய்‌!


Parimelalagar

பொழுதொடு புலந்து சொல்லியது. பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய்.
விளக்கம்:
(முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். 'வாழி' என்பது குறிப்புச் சொல். "வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை" (கலித். நெய்தல். 2 ) என்றார்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். 'வேலை' என்பதற்கு வேலாயிருந்தாய் 'என்பாரும்' உளர்.)


Manakkudavar

பொழுதுகண்டிரங்கலாவது மாலைப்பொழுது கண்டு தலைமகள் வருந்துதல். ஏனைப்பொழுதில் வருத்தமிலரோவெனின், பிரியப்பட்டார்க்கு எல்லாக் காலமும் வருத்தமுளவாயினும், விடியலும் நண்பகலும் போலாது மாலைப்பொழுது வருத்த மிகுதலால், இது கூறப்பட்டது. (இதன் பொருள்) பொழுதே! நீ வெப்பமுடையை யான்மையான், மாலையோ எனின், அல்லை; முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகிய வொரு வேலாயிருந்தாய்,
(என்றவாறு) இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.