குறள் 1220

கனவுநிலையுரைத்தல்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்

nanavinaal namneeththaar yenpar kanavinaal
kaanaarkol ivvoo ravar


Shuddhananda Bharati

Dream visions

The townsmen say he left me thus
In dreams failing to see him close.


GU Pope

The Visions of the Night

They say, that he in waking hours has left me lone;
In dreams they surely see him not,- these people of the town.

The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.


Mu. Varadarajan

நனவில்‌ நம்மைவிட்டு நீங்கினார்‌ என்று காதலரைப்‌ பழித்துப்‌ பேசுகின்றனரே! இந்த ஊரார்‌ கனவில்‌ அவரைக்‌ காண்பதில்லையோ!


Parimelalagar

இதுவும் அது இவ்வூரவர் நனவினான் நம்நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ?
விளக்கம்:
('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளே யாம்,' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.)


Manakkudavar

(இதன் பொருள்) இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றாரென்று அவ ரைக் கொடுமை கூறாநிற்பர்; அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ! () இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.