குறள் 1219

கனவுநிலையுரைத்தல்

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்

nanavinaal nalkaarai novar kanavinaal
kaathalark kaanaa thavar


Shuddhananda Bharati

Dream visions

In dreams who don't discern lovers
Rue their missing in wakeful hours.


GU Pope

The Visions of the Night

In dreams who ne'er their lover's form perceive,
For those in waking hours who show no love will grieve.

They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my wakinghours.


Mu. Varadarajan

கனவில்‌ காதலர்‌ வரக்‌ காணாத மகளிர்‌ நனவில்‌ வந்து அன்பு செய்யாத காதலரை (அவர்‌ வராத காரணம்‌ பற்றி) நொந்துகொள்வர்‌.


Parimelalagar

இதுவும் அது. கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின் கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவா நிற்பர்.
விளக்கம்:
(இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய் அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின் கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நனவின்கண் வந்து நல்காத காதலரை நோவாநிற்பர், கனவின் கண் அவரைக் காணாதவர்; காண்பாராயின், நோவார்,
(என்றவாறு). இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.