Kural 1209
குறள் 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து
viliyumaen innuyir vaerallam yenpaar
aliyinmai aatrra ninaindhthu
Shuddhananda Bharati
Dear life ebbs away by thought
Of him who said we are one heart.
GU Pope
Dear life departs, when his ungracious deeds I ponder o'er,
Who said erewhile, "We're one for evermore’.
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
Mu. Varadarajan
'நாம் இருவரும் வேறு அல்லேம்' என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைந்து என் இனிய உயிர் அழிகின்றது.
Parimelalagar
தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் 'நாம் இருவரும் வேறல்லம்,' என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து; என் இன்னுயிர் விளியும் - எனது இனிய உயிர் கழியாநின்றது.
விளக்கம்:
(அளியின்மை, பின் வருவராதலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு,' என எதிர்அழிந்து கூறியவாறு.)
Manakkudavar
(இதன் பொருள்) நம்முள் நாம் வேறல்ல தொன்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது இனிய உயிர் அழியாநின்றது, (எ - று ) இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.