குறள் 1207

நினைந்தவர்புலம்பல்

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்

marappin yevanaavan matrkol marappariyaen
ullinum ullam sudum


Shuddhananda Bharati

Sad memories

What will happen if I forget
When his memory burns my heart?


GU Pope

Sad Memories

If I remembered not what were I then? And yet,
The fiery smart of what my spirit knows not to forget!

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should everforget it ?


Mu. Varadarajan

(காதலரை) மறந்தறியாமல்‌ நினைத்தாலும்‌ உள்ளத்தைப்‌ பிரிவுத்‌ துன்பம்‌ சுடுகின்றதே! நினைக்காமல்‌ மறந்துவிட்டால்‌ என்ன ஆவேனோ?


Parimelalagar

இதுவும் அது. மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடா நின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்த படாது உளேனாவது எத்தால்?
விளக்கம்:
(மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது 'மண்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசை நிலை.)


Manakkudavar

(இதன் பொருள்) அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ ; மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது,
(என்றவாறு). இது சீரியன் உள்ளிப் பூரியன் மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலை மகள் கூறியது.