Kural 1206
குறள் 1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்
matrriyaan yennulaen manno avaroduyaan
utrranaal ulla ulaen
Shuddhananda Bharati
Beyond the thought of life with him
What else of life can I presume?
GU Pope
How live I yet? I live to ponder o'er
The days of bliss with him that are no more.
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
Mu. Varadarajan
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக்கொள்வதால்தான் உயிரோடிருக்கின்றேன்; வேறு எதனால் உயிர்வாழ்கின்றேன்?
Parimelalagar
அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும்,' என்றாட்குச் சொல்லியது. யான் அவரொடு உற்ற நான் உள்ளே உளேன் - யான் அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன் ?
விளக்கம்:
(நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன் ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன் தூது வருதல், தன் தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை,' என்பது கருத்து.)
Manakkudavar
(இதன் பொருள்) யான் அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்; அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன். இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ் வாறு நினைந்திரங்கள் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.