குறள் 1205

நினைந்தவர்புலம்பல்

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்

thamnaenjchaththu yemmaik katikontaar naanaarkol
yemnaenjchaththu oavaa varal


Shuddhananda Bharati

Sad memories

Shame! My heart often he enters
Banning me entry into his.


GU Pope

Sad Memories

Me from his heart he jealously excludes:
Hath he no shame who ceaseless on my heart intrudes?

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine.


Mu. Varadarajan

தம்முடைய நெஞ்சில்‌ எம்மை வரவிடாது காவல்‌ கொண்ட காதலர்‌, எம்முடைய நெஞ்சில்‌ தாம்‌ ஓயாமல்‌ வருவதைப்பற்றி நாணமாட்டாரோ!


Parimelalagar

இதுவும் அது. தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணால்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணால்கொல்லோ?
விளக்கம்:
(ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றான்.)


Manakkudavar

(இதன் பொருள்) தாது நெஞ்சின்கண் எர்மை யாம் செல்லாமல் காவல்கொண் டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாபோ, (எ - று ) இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையா ரென்று தெளிந்து கூறியது.