குறள் 1204

நினைந்தவர்புலம்பல்

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்

yaamum ulaengkol avarnaenjchaththu yendhnaenjchaththu
oao ularae avar


Shuddhananda Bharati

Sad memories

Have I a place within his heart?
Ah from mine he will never depart.


GU Pope

Sad Memories

Have I a place within his heart!
From mine, alas! he never doth depart.

He continues to abide in my soul, do I likewise abide in his ?


Mu. Varadarajan

எம்முடைய நெஞ்சில்‌ காதலராகிய அவர்‌ இருக்கின்றாரே! (அது போலவே) யாமும்‌ அவருடைய நெஞ்சத்தில்‌ நீங்காமல்‌ இருக்கின்றோமோ?


Parimelalagar

இதுவும் அது. எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழுதும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ?
விளக்கம்:
(ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) அவர் நெஞ்சத்து யாமும் 2 ளேங்கொல்லோ ; எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராக நின்றார்,
(என்றவாறு). ஒஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என் னும் பொருளதாயிற்று.