Kural 1201
குறள் 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
ullinum theeraap paerumakil seithalaal
kallinum kaamam inithu
Shuddhananda Bharati
Love is sweeter than wine; for vast
Is its delight at very thought.
GU Pope
From thought of her unfailing gladness springs,
Sweeter than palm-rice wine the joy love brings.
Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.
Mu. Varadarajan
நினைந்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் (உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும்) கள்ளைவிடக் காமம் இன்பமானதாகும்.
Parimelalagar
தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் - முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அது பொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து.
விளக்கம்:
(தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு.)
Manakkudavar
நினைந்தவர் புலம்பலவது சேய்மைக்கண்ணாயினும் அண்மைக்கண்ணா யினும், பிரிந்த தலைமகனை ஒழிவின்றி நினைந்த தலை மகளிர் துன்பமுறுதல். நினைத்தவர் புலம்ப லெபன் பாட மாயின், அதற்கு அவரை நினைத்துப் புலம்ப லென்று பொருளுரைத்துக்கொள்க (இதன் பொருள்) தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும். அது நீங்காத பெருங்களிப்பைத்தரும் ; ஆதலால், கள்ளினும் நாமம் இனிது,
(என்றவாறு).