குறள் 1200

தனிப்படர்மிகுதி

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு

uraaarkku urunoi uraippaai kadalaich
seraaaai vaaliya naenjsu


Shuddhananda Bharati

Pining alone

You tell your grief to listless he
Bless my heart! rather fill up sea!


GU Pope

The Solitary Anguish

Tell him thy pain that loves not thee?
Farewell, my soul, fill up the sea!

Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).


Mu. Varadarajan

நெஞ்சமே! நீ வாழிய ! அன்பு இல்லாதவரிடம்‌ உன்‌ மிகுந்த துன்பத்தைச்‌ சொல்கின்றாய்‌! அதைவிட எளிதாகக்‌ கடலைத்‌ தூர்ப்பாயாக.


Parimelalagar

தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது. உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாய; அஃது எளிது.
விளக்கம்:
(உரைக்கலுற்றது அளவிறந்த நோயகலானும், கேட்பார் உறவினராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.)


Manakkudavar

(இதன் பொருள்) நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பய னில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்; நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின், அஃது அதனினும் நன்று,
(என்றவாறு) இது தூதுவிடக்கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை யென்று தலைமகள் கூறியது.