குறள் 1198

தனிப்படர்மிகுதி

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்

veelvaarin insol paeraaathu ulakaththu
vaalvaarin vankanaar il


Shuddhananda Bharati

Pining alone

None is so firm as she who loves
Without kind words from whom she dotes.


GU Pope

The Solitary Anguish

Who hear from lover's lips no pleasant word from day to day,
Yet in the world live out their life,- no braver souls than they!

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kindword from their beloved.


Mu. Varadarajan

தான்‌ விரும்பும்‌ காதலரின்‌ இனிய சொல்லைப்‌ பெறாமல்‌ உலகத்தில்‌ பிரிவுத்‌ துன்பத்தைப்‌ பொறுத்து வருகின்ற வரைப்போல்‌ வன்கண்மை ௨யவர் இல்லை


Parimelalagar

தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது. வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தம் காதலரிடத்து நின்று வரும் இனிய சொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப் போல், வன்கண்ரையுடையார் இவ்வுலகத்து இல்லை.