குறள் 1197

தனிப்படர்மிகுதி

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்

paruvaralum paithalum kaanaankol kaaman
oruvarkan ninroluku vaan


Shuddhananda Bharati

Pining alone

This cupid aims at me alone;
Knows he not my pallor and pain?


GU Pope

The Solitary Anguish

While Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown?

Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?


Mu. Varadarajan

(காதலர்‌ இருவரிடத்திலும்‌ ஒத்திருக்காமல்‌) ஒருவரிடத்தில்‌ மட்டும்‌ காமன்‌ நின்று இயங்குவதால்‌, என்னுடைய துன்பத்தையும்‌ வருத்தத்தையும்‌ அறியானோ?


Parimelalagar

இதுவும் அது. ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான் கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ!
விளக்கம்:
('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான்; இனி யான் உய்யுமாற என்னை?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தான் ஒருவர் பக்கமாக நின்று ஒழுகித் துன்பஞ் செய்கின்ற காம தேவன், நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ ? காண் பானாயின், நம்மை வருத்தானே; தெய்வமாகலான்,
(என்றவாறு).