குறள் 1196

தனிப்படர்மிகுதி

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது

oruthalaiyaan innaathu kaamamkaap pola
iruthalai yaanum inithu


Shuddhananda Bharati

Pining alone

One sided pains; love in both souls
Poises well like shoulder poles.


GU Pope

The Solitary Anguish

Love on one side is bad; like balanced load
By porter borne, love on both sides is good.

Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.


Mu. Varadarajan

காதல்‌ ஒரு பக்கமாக இருத்தல்‌ துன்பமானது; காவடியின்‌ பாரம்போல்‌ இருபக்கமாகவும்‌ ஒத்திருப்பது இன்பமானதாகும்‌.


Parimelalagar

இதுவும் அது. காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக் கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.
விளக்கம்:
(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா - ஆகுபெயர். என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும் உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது ; காவினது பாரம்போல, இரண்டு தலையும் ஒத்த அன்பினாலுண்டாகிய காமமே இனிதா வது,
(என்றவாறு). இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும், தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூட்டினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறி