குறள் 1194

தனிப்படர்மிகுதி

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்

veelap paduvaar keleeiyilar thaamveelvaar
veelap pataaar yenin


Shuddhananda Bharati

Pining alone

Whose love is void of love in turn
Are luckless with all esteems they earn.


GU Pope

The Solitary Anguish

Those well-beloved will luckless prove,
Unless beloved by those they love.

Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.


Mu. Varadarajan

தாம்விரும்பும்‌ காதலரால்‌ விரும்பப்படாவிட்டால்‌ உலகத்தாரால்‌ விரும்பப்படும்‌ நிலையில்‌ உள்ளவரும்‌ நல்வினை பொருந்தியவர்‌ அல்லர்‌.


Parimelalagar

'காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி,' என்ற தோழிக்குச் சொல்லியது. வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.
விளக்கம்:
(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை; நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையேற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டா ரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின், விருப்பமில்லா ராவர்,
(என்றவாறு). இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலை மகளுக்கு நீ இவ்வாறு கூறுவை பாயின், நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்றதோழிக்கு அவள் கூறியது. கொண்டான் கயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.