குறள் 1193

தனிப்படர்மிகுதி

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு

veelunar veelap paduvaarkku amaiyumae
vaalunam yennum serukku


Shuddhananda Bharati

Pining alone

The pride of living is for those
Whose love is returned by love so close.


GU Pope

The Solitary Anguish

Who love and are beloved to them alone
Belongs the boast, "We've made life's very joys our own.'

The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).


Mu. Varadarajan

காதலரால்‌ விரும்பப்படுகின்றவர்க்குப்‌ (பிரிவுத்‌ துன்பம்‌ இருந்தாலும்‌) 'மீண்டும்‌ வந்தபின்‌ வாழ்வோம்‌ என்று இருக்கும்‌ செருக்குத்‌ தகும்‌.


Parimelalagar

இதுவும் அது. வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு.
விளக்கம்:
(நாம் அவரான் விழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண் இரு ந்து உயிர்வாழ்வோமென்னுங் களிப்பு அமையும்,
(என்றவாறு). இது தலைமகள் இருந்தாலும் பயனில்லை; அதிற்சாதல் அமையுமென்று வாழ்க் கையை முனிந்து தோழிக்குக் கூறியது.