Kural 1192
குறள் 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி
vaalvaarkku vaanam payandhthatrraal veelvaarkku
veelvaar alikkum ali
Shuddhananda Bharati
The lover - and -beloved's self-givings
Are like rains to living beings.
GU Pope
As heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love.
The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the properseason) on those who live by it.
Mu. Varadarajan
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர்வாழ்கின்றவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.
Parimelalagar
இதுவும் அது. வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி;வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும்.
விளக்கம்:
('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது,' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள் உயிர் வாழ்வார்க்கு மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.