குறள் 1191

தனிப்படர்மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி

thaamveelvaar thamveelap paetrravar paetrraarae
kaamaththuk kaalil kani


Shuddhananda Bharati

Pining alone

Stoneless fruit of love they have
Who are beloved by those they love.


GU Pope

The Solitary Anguish

The bliss to be beloved by those they love who gains,
Of love the stoneless, luscious fruit obtains.

The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?


Mu. Varadarajan

தாம்‌ விரும்பும்‌ காதலர்‌ தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர்‌, காதல்‌ வாழ்க்கையின்‌ பயனாகிய விதை இல்லாத பழத்தைப்‌ பெற்றவரே ஆவர்‌.


Parimelalagar

'காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர்; நீ அவரோடு பேரின்பம் நுகர்தி,' என்ற தோழிக்குச் சொல்லியது. தாம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர்; பெற்றோரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காமநுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை.
விளக்கம்:
(காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது, முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனியாம் பெற்றிலேன்,' என்பதாயிற்று.)


Manakkudavar

தனிப்படர்மிகுதியாவது தனிமையால் வந்த துன்ப மிகுதி கூறுதல். யாம் பசப்பால் வருந்துகின்றமைபோல் அவரும் வருந்துவாரென்றும் புணர்ச்சியிடைய றாமல் இனிது நடக்குமென்றும் நினைத்துத் தலைமகள் தனது துன்பத்தினைக் கூறுதலான், அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின் கண் பாலில்லாததோர் பழத்தைப் பெற்றாராவர்,
(என்றவாறு). இது தடையின்றி நுகரலாமென்றது.