குறள் 1189

பசப்புறுபருவரல்

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்

pachakkaman pattaangken maeni nayappiththaar
nannilaiyar aavar yenin


Shuddhananda Bharati

Wailing over pallor

Let all my body become pale
If he who took my leave fares well.


GU Pope

The Pallid Hue

Well! let my frame, as now, be sicklied o'er with pain,
If he who won mny heart's consent, in good estate remain!

If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turnsallow.


Mu. Varadarajan

பிரிவுக்கு உடன்படச்‌ செய்த காதலர்‌ நல்ல நிலையுடையவர்‌ ஆவார்‌ என்றால்‌, என்னுடைய மேனி உள்ளபடி பசலைநிறம்‌ அடைவதாக .


Parimelalagar

இதுவும் அது. நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக.
விளக்கம்:
(நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்?' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)


Manakkudavar

(இதன் பொருள்) என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக; நம்மைக் காதலித்த வரும் நம்மைப் போலத் துன்பமுறுவராயின்,
(என்றவாறு). இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.