குறள் 1188

பசப்புறுபருவரல்

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்

pachandhthaal ivalyenpathu allaal ivalaith
thurandhthaar avaryenpaar il


Shuddhananda Bharati

Wailing over pallor

On my pallor they cast a slur
But none says "lo he parted her".


GU Pope

The Pallid Hue

On me, because I pine, they cast a slur;
But no one says, 'He first deserted her.'

Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".


Mu. Varadarajan

'இவள்‌ பிரிவால்‌ வருந்திப்‌ பளலைநிறம்‌ அடைந்தாள்‌ என்று பழி சொல்வதே அல்லாமல்‌, 'இவளைக்‌ காதலர்‌ விட்டுப்‌ பிரிந்தார்‌ என்று சொல்பவர்‌ இல்லையே!


Parimelalagar

'நீ இங்ஙனம் பசக்கற்பாலைபல்லை,' என்ற தோழியோடு புலந்து சொல்லியது. இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது;
விளக்கம்:
(இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. 'என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல்பற்றிப் புலக்கின்றமையின்.)


Manakkudavar

(இதன் பொருள்) இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இாைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை,
(என்றவாறு). இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.