குறள் 1187

பசப்புறுபருவரல்

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு

pullik kidandhthaen putaipaeyarndhthaen avvalavil
allikkol vatrrae pachappu


Shuddhananda Bharati

Wailing over pallor

From his embrace I turned a nonce
This pallor swallowed me at once.


GU Pope

The Pallid Hue

I lay in his embrace, I turned unwittingly;
Forthwith this hue, as you might grasp it, came on me.

I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on.


Mu. Varadarajan

தலைவனைத்‌ தழுவிக்‌ கிடந்தேன்‌; பக்கத்தே சிறிது அகன்றேன்‌; அவ்வளவிலேயே பசலை நிறம்‌ அள்ளிக்‌ கொள்வதுபோல்‌ வந்து பரவிவிட்டதே!


Parimelalagar

இதுவும் அது. புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடை பெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது.
விளக்கம்:
('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடைபெயர்ந்தனன்; அவ்வளவிலே, அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை,
(என்றவாறு). இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக் குத் தலைமகள் கூறியது.