குறள் 1186

பசப்புறுபருவரல்

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

vilakkatrram paarkkum irulaepol konkan
muyakkatrram paarkkum pachappu


Shuddhananda Bharati

Wailing over pallor

Just as darkness waits for light-off
Pallor looks for lover's arms-off.


GU Pope

The Pallid Hue

As darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord's embrace.

Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.


Mu. Varadarajan

விளக்கினுடைய மறைவைப்‌ பார்த்துக்‌ காத்திருக்கின்ற இருளைப்போலவே, தலைவனுடைய தழுவுதலின்‌ சோர்வைப்‌ பசலை பார்த்துக்‌ காத்திருக்கின்றது.


Parimelalagar

இதுவும் அது. விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளேபோல; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு.
விளக்கம்:
('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது?' என்பாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போல், கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு,
(என்றவாறு). இஃது அவர் பிரிந்தது இப்பொழுது ; இப்ப சப்பு யாங்ஙன் வந்தது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.