குறள் 1184

பசப்புறுபருவரல்

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு

ulluvan manyaan uraippathu avarthiramaal
kallam piravo pachappu


Shuddhananda Bharati

Wailing over pallor

He is my thought, his praise my theme
Yet this pallor steals over my frame.


GU Pope

The Pallid Hue

I meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray.

I think (of him); and what I speak about is but his excellence; stillis there sallowness; and this is deceitful.


Mu. Varadarajan

யான்‌ அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்‌; யான்‌ உரைப்பதும்‌ அவற்றையே; அவ்வாறிருந்தும்‌ பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?


Parimelalagar

'பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்,' என்றவழிச் சொல்லியது. யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது இது வஞ்சனையாயிருந்தது.
விளக்கம்:
(பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத்தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) யான் எக்காலமும் நினைப்பேன்; சொல்லுவதும் அவர் திறமே; இத்தன்மையேனாகவும், பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது; இதற்கு நிலை யான் அறிகிலேன்,
(என்றவாறு). இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.