Kural 1183
குறள் 1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து
saayalum naanum avarkontaar kaimmaaraa
noyum pachalaiyum thandhthu
Shuddhananda Bharati
He seized my beauty and modesty
Leaving pangs and Pallor to me.
GU Pope
Of comeliness and shame he me bereft,
While pain and sickly hue, in recompense, he left.
He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness.
Mu. Varadarajan
காமநோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
Parimelalagar
'அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார்.
விளக்கம்:
(எதிர் நிரல் நிறை. 'அடக்குந் தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா,' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) மேன்மையும் நாணமும் அவர் கொண்டுபோனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து,
(என்றவாறு). மேன்மை - பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மை யும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமையாற் கூறியது.