குறள் 1181

பசப்புறுபருவரல்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற

nayandhthavarkku nalkaamai naerndhthaen pachandhthavaen
panpiyaarkku uraikkoa pira


Shuddhananda Bharati

Wailing over pallor

My lover's parting, I allowed
Whom to complain my hue pallid?


GU Pope

The Pallid Hue

I willed my lover absent should remain;
Of pining's sickly hue to whom shall I complain?

I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of myhaving turned sallow.


Mu. Varadarajan

விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்‌; பிரிந்தபின்‌ பசலை உற்ற என்‌ தன்மையை வேறு யார்க்குச்‌ சென்று சொல்வேன்‌?


Parimelalagar

(முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான் பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்?
விளக்கம்:
('பிற என்பது அசைநிலை உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ?' என்றும் கூறினாள்.)


Manakkudavar

பசப்புறு தலாவது பசப்புறு தலால் வந்த வருத்தத்தைத் தோழிக்குத் தலை மகள் கூறுதல். காதலித்தார்க்குக் காதலிக்கப்படும்பொரு ளெய் தாக்கால் அவர் நிறம் வேறுபடுமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மாற்றியாவர்க்குச் சொல்லுவேன்,
(என்றவாறு). இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.