குறள் 1180

கண்விதுப்பழிதல்

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து

maraipaeral ooraarkku arithanraal yempol
araiparai kannaar akaththu


Shuddhananda Bharati

Wasteful look for wistful love

Like drum beats eyes declare my heart;
From people who could hide his secret?


GU Pope

Eyes consumed with Grief

It is not hard for all the town the knowledge to obtain,
When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.

It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine,are as it were beaten drums.


Mu. Varadarajan

அறையப்படும்‌ பறைபோல்‌ துன்பத்தை வெளிப்படுத்தும்‌ கண்களை உடைய எம்மைப்‌ போன்றவரிடத்தில்‌ மறைபொருளான செய்தியை அறிதல்‌ ஊரார்க்கு அரிது அன்று.


Parimelalagar

'காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்போலும் அறைபறையாகிய கண்ணினையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது.
விளக்கம்:
('மறை' என்றது, ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்கு அறிவித்தலாகிய தொழிலான் ஒற்றுமை உண்மையின், 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) எம்மைப் பே ல அறைபறையாகிய கண்களையுடையார்மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது,
(என்றவாறு).