குறள் 1179

கண்விதுப்பழிதல்

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்

vaaraakkaal thunjsaa varinthunjsaa aayitai
aaragnyar utrrana kan


Shuddhananda Bharati

Wasteful look for wistful love

He comes; no sleep; he goes; no sleep
This is the fate of eyes that weep.


GU Pope

Eyes consumed with Grief

When he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear.

When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyesendure unbearable agony.


Mu. Varadarajan

காதலர்‌ வாராவிட்டால்‌ தூங்குவதில்லை; வந்தாலும்‌ தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என்கண்கள்‌ மிக்க துன்பத்தை அடைந்தன.


Parimelalagar

'நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது. வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன - ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய.
விளக்கம்:
('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித் துஞ்சா ; அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்ப முற்றன் கண்கள்,
(என்றவாறு). இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்கு, தலைமகள் இன்றேயல்ல, எஞ் ஞான்றும் உறக்கமில்லை யென்றது.