குறள் 1170

படர்மெலிந்திரங்கல்

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்

ullamponru ulvalich selkitrpin vaellaneer
neendhthala mannoyen kan


Shuddhananda Bharati

Wailing of pining love

Like heart, if my sight reaches him
It won't in floods of tears swim!


GU Pope

Complainings

When eye of mine would as my soul go forth to him,
It knows not how through floods of its own tears to swim.

Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.


Mu. Varadarajan

காதலர்‌ உள்ள இடத்திற்கு என்‌ மனத்தைப்போல்‌ செல்ல முடியுமானால்‌, என்‌ கண்கள்‌ இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில்‌ நீந்த வேண்டியதில்லை.


Parimelalagar


விளக்கம்:
(அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனோடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)


Manakkudavar

(இ-ள்.) அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லன வாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா. (
(என்றவாறு). இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.