குறள் 1169

படர்மெலிந்திரங்கல்

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா

kotiyaar kodumaiyin thaamkotiya indhnaal
naetiya kaliyum iraa


Shuddhananda Bharati

Wailing of pining love

Crueller than that cruel he
Are midnight hours gliding slowly.


GU Pope

Complainings

More cruel than the cruelty of him, the cruel one,
In these sad times are lengthening hours of night I watch alone.

The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.


Mu. Varadarajan

(பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில்‌ நெடுநேரம்‌ உடையனவாய்க்‌ கழிகின்ற இராக்காலங்கள்‌, பிரிந்த கொடியவரின்‌ கொடுமையைவிடத்‌ தாம்‌ கொடியவை.


Parimelalagar

இதுவும் அது. இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யா நின்ற.
விளக்கம்:
(தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல் அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) கொடியவர் செய்த கொடுமையிலும் தாம் கொடியவைாய் நின்றன; இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்,
(என்றவாறு). இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைகள் தோழிக்குச் சொல்லியது.