குறள் 1166

படர்மெலிந்திரங்கல்

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது

inpam kadalmatrruk kaamam akhthadungkaal
thunpam athanitr paerithu


Shuddhananda Bharati

Wailing of pining love

The pleasure in love is oceanful
But its pangs are more painful.


GU Pope

Complainings

A happy love's sea of joy; but mightier sorrows roll
From unpropitious love athwart the troubled soul.

The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.


Mu. Varadarajan

காமம்‌ மகிழ்விக்கும்போது அதன்‌ இன்பம்‌ கடல்‌ போன்றது; அது வருத்தும்போது அதன்‌ துன்பமோ கடலைவிடப்‌ பெரியது.


Parimelalagar

'காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்,' என்ற தோழிக்குச் சொல்லியது. காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல்போலப் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம்.
விளக்கம்:
('மற்று' வினை மாற்றிக்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்துவரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) காமப்புணர்வினால் நமக்கு வரும் இன்பம் கடல்போலப் பெரிது; பிரிவினான், அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது, (எ-று). இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது.