Kural 1165
குறள் 1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்
thuppin yevanaavar mankol thuyarvaravu
natpinul aatrru pavar
Shuddhananda Bharati
What wilt they prove when they are foes
Who in friendship bring me woes!
GU Pope
Who work us woe in friendship's trustful hour,
What will they prove when angry tempests lower?
He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?
Mu. Varadarajan
(இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச்செய்ய வல்லவர்,துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரே?
Parimelalagar
தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் - இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்ய வல்லவர்; துப்பின் எவனாவர் கொல் - துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ?
விளக்கம்:
(துப்புப் பகையுமாதல், ''துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன்'' நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன்'' (புறநா.80) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், 'அவர் செய்வது அறியப் பெற்றிலேம்' என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. துயர் வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள்.)
Manakkudavar
(இதன் பொருள்) மென்மை செய்ய வேண்டும் நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர், வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ? இது பகை தணி வினையின்கண் பிரிந்த தலைமகனது கொடுமையை உட் கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.