குறள் 1164

படர்மெலிந்திரங்கல்

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்

kaamak kadalmannum untae athuneendhthum
yaemap punaimannum il


Shuddhananda Bharati

Wailing of pining love

My lust is a sea, I do not see
A raft to go across safely.


GU Pope

Complainings

A sea of love, 'tis true, I see stretched out before,
But not the trusty bark that wafts to yonder shore.

There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.


Mu. Varadarajan

காமநோயாகிய கடல்‌ இருக்கின்றது; ஆனால்‌, அதை நீந்திக்‌ கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.


Parimelalagar

'தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்ற புணையான் நீந்திக் கடப்பார்' என்ற தோழிக்குச் சொல்லியது. உண்டு காமக்கடலே - யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதனை நீந்தும் அரணாகிய புனை இல்லை.
விளக்கம்:
(இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும் ஆயிற்றிலை'' என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) காமக்கடல் நிலையாக உண்டே , அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே,
(என்றவாறு). இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லை யெனத் தலைமகள் கூறியது.